18-வது சிட்னி கிரிக்கெட் தொடர் நிறைவு: சாம்பியன் பட்டம் வென்றது அதிரை AFCC! (புகைப்படங்கள்)

அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்திய 18 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர்ப்போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த மே 29 அன்று தொடங்கிய இத்தொடரின் இறுதிப் போட்டியும், பரிசளிப்பு விழாவும் நேற்று (01-06-2026) சிட்னி மைதானத்தில் நடைபெற்றது.

இத்தொடரில் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த முன்னணி 16 அணிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தின. லீக் சுற்றுகளின் முடிவில், ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அதிரை AFCC அணியும், அதிரை சிட்னி அணியும் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அதிரை AFCC அணி வெற்றி பெற்று முதல் பரிசைத் தட்டிச் சென்றது.

போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்ற அணிகளின் விவரம்:

முதல் பரிசு: அதிரை AFCC அணி

இரண்டாம் பரிசு: அதிரை சிட்னி அணி

மூன்றாம் பரிசு: பட்டுக்கோட்டை அணி

நான்காம் பரிசு: மல்லிபட்டினம் அணி

போட்டி நிறைவடைந்ததும் மைதானத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

Advertisement